டிப்போக்களில் 'உமட்டும்' உணவு: அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் கண்ணீர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
23:56

கோவை:அரசு போக்குவரத்து கழக உணவகங்களில், தரமற்ற உணவு வழங்குவதோடு, இருக்கை பற்றாக்குறை இருப்பதாகவும், கேள்வி கேட்டால் ஒப்பந்ததாரர்கள் மிரட்டுவதாக பணியாளர்கள குமுறுகின்றனர்.கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில், 3,170 பஸ்கள் பராமரிக்கப்படுகின்றன. டிரைவர், கண்டக்டர்கள், பராமரிப்பு பணியாளர்களுக்கென இரு டிப்போக்களுக்கு ஒரு உணவக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


உணவு சமைத்து பரிமாற, பராமரிக்க தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. சாப்பாடு - ஒரு ரூபாய், தயிர் - 25 காசு என குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகின்றன.உக்கடம் மற்றும் சுங்கம்-1 கிளைகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக பணியாளர்கள் புலம்புகின்றனர். ஆயிரக்கணக்கானோர் உண்ணும் உணவு, பால், தயிர் போன்றவற்றை பூனை உட்கொள்ளும் அளவுக்கு பராமரிப்பு படுமோசமாக இருப்பதாகவும், இருக்கை பற்றாக்குறையாக இருப்பதாகவும், அடுக்கடுக்கான புகார்களை அவர்கள் பதிவுசெய்கின்றனர்.டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் கூறுகையில், 'உக்கடம் மற்றும் சுங்கம் கிளை உணவகங்களில் இருக்கைகள் மோசமான நிலையில் இருப்பதால், நின்றுகொண்டு சாப்பிட வேண்டியுள்ளது.


மின்விசிறிகளும் சரியாக இயங்குவதில்லை. ஆட்கள் பற்றாக்குறையால், உணவகம் சரியாக பராமரிக்கப்படாத நிலை உள்ளது. உணவக பொறுப்பாளர்களிடம் கேள்வி கேட்டால் மிரட்டுகின்றனர்' என்றனர்.ஆய்வு செய்யப்படும்!அரசு போக்குவரத்து கழக கோவை மண்டல பொது மேலாளர் மகேந்திரகுமாரிடம் கேட்டபோது, ''உக்கடம்-1 கிளை உணவகம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இருப்பினும், அவ்விரு உணவகங்களில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X