இவர்கள், ஓய்வறியா ஆசிரியர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

25 ஆக
2019
10:46
பதிவு செய்த நாள்
ஆக 25,2019 00:05

அரசு பணியில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பேராசிரியர், டாக்டர் என, அனைத்து துறைகளை சார்ந்தவர்களும் ஒன்றிணைந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவசமாக ஆலோசனை வழங்கி வருகின்றனர்.கோவையை சேர்ந்தவர் பேராசிரியர் ரங்கநாதன்,75. இவர், 25 ஆண்டுகள் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றினார். பாரதியார் பல்கலை துணைவேந்தர் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.


தன்னை போலவே அரசு பணிகளில் பணியாற்றி, ஓய்வு பெற்ற நண்பர்களை இணைத்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பள்ளிகளுக்கே சென்று, ஆலோசனை வழங்கி வருகிறார்.இக்குழுவினர், கடந்த, 25 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆலோசனை வழங்கி வந்துள்ளனர்.பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இக்குழுவுக்கு இதுவரை எந்த பெயரும் இல்லை. தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்தால் போதும்; குறிப்பிட்ட பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு பயிற்சி அளித்துச் செல்கின்றனர். சமீபத்தில், வேடபட்டியில் உள்ள பி.எஸ்.ஜி., உயர்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு மாணவர்கள், அப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களுக்கு தனித்தனியாக ஆலோசனை வழங்கினர்.


பேராசிரியர் ரங்கநாதன் கூறுகையில், ''அரசு துறையில் பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற போது, பள்ளி மாணவர்களது மனதில் ஒரு வகையான சலசலப்பு இருந்ததை உணர்ந்தோம். ஒரு மாணவன், நன்றாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்றால், கட்டாயம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அவசியம். மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும்போது, அவர்களின் பெற்றோர், ஆசிரியர்களுக்கும் ஆலோசனை வழங்கி வருகிறோம்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X