கர்ப்பிணிகளை காக்கும் 'போஷன் அபியான்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
00:07

ஒரு மனிதன் தரிசிக்கும் முதல் கோவில், தாயின் கருவறை. அனைத்து ஜீவராசிகளுக்கும், தாயே முதல் தெய்வம். தாய்மை என்பது, பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். அவர்களுக்கு பல சிறப்புகள் இருந்தாலும், தாய்மையே முதல் சிறப்பு.


பெண் கருவுற்ற ஆறாவது மாதம் முதல், வெளியுலகை உணரத்துவங்குகிறது, கருவில் உள்ள சிசு. இந்நேரத்தில், பெண்களின் மனதில், குழந்தை வளர்ச்சி, பிரசவம் குறித்து ஒருவித பயம் தோன்றும். இதைப்போக்க, நம் முன்னோர், கருவுற்ற ஏழாவது மாதம் அல்லது ஒன்பதாவது மாதத்தில், பெண்ணின் தாய் வீட்டில் 'வளைகாப்பு' நிகழ்ச்சி நடத்துகின்றனர்.அப்போது, ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்குவதால் கர்ப்பிணி, கருவில் உள்ள குழந்தையின் நலன் பேணிக்காக்கப்படுகிறது. கைகளில் அணிவிக்கப்படும் வளையல்கள் மூலம், குழந்தையின் உடல்நலம் மற்றும் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.அதனால், கருவுற்ற காலங்களில் எப்படி இருக்க வேண்டும்; குழந்தை வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து, உணவு பழக்கங்கள், சுகாதார முறை குறித்து, மத்திய அரசின், 'போஷன் அபியான்' திட்டத்தில், அங்கன்வாடிகளில், கலாசார நிகழ்வு மூலம் எடுத்துரைக்கப்படுகிறது.தொண்டாமுத்துார் வட்டாரத்தில், 78 அங்கன்வாடிகள் செயல்படுகின்றன. இப்பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு, அங்கன்வாடி மையத்தில், மாதத்தில் முதல் திங்கள் மற்றும் மூன்றாவது திங்கள் கிழமையில், சமுதாயம் சார்ந்த நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.


வடவள்ளியில், உறவினர்கள் முன்னிலையில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில், மூன்று விதமான உணவுடன் விருந்தும் அளிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசின் இத்திட்டம், பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.தொண்டாமுத்துார் வட்டார குழந்தை வளர்ச்சி அலுவலர் ஜெனிபர் புஷ்பலதா கூறியதாவது:மத்திய அரசின், 'போஷன் அபியான்' திட்டம் மூலம், கர்ப்பிணிகளுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.


மக்களுக்கு, கருத்து மூலம் மட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாது. நம் கலாசார நிகழ்ச்சி மூலம், கர்ப்பிணிகள் மற்றும் குடும்பத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.இதில், ஐந்து திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். கர்ப்ப கால கவனிப்பை எடுத்துரைக்கும் விதமாக, 'வளைகாப்பு நிகழ்ச்சி' நடத்துகிறோம். குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதம் கட்டாயம் தாய்ப்பால் ஊட்ட வேண்டும். அதன் பின், அனைத்து வகையான உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும்.


அதை எடுத்துரைக்கும் வகையில், 'அன்ன பிரசாதம்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.கருவுற்ற பெண்ணை, கணவன் எவ்வாறு கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துரைக்க, 'சுபோஷன் திவாஸ்' நடத்துகிறோம். தாய் மற்றும் குழந்தையின் சுகாதாரம், வீட்டில் சுத்தமாக இருக்க வேண்டியது குறித்து, 'சுகாதார தினம்' நிகழ்ச்சி எடுத்துரைக்கிறது. 2 முதல், 5 வயது வரையான குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 'மாணவர் சேர்க்கை' ஆகிய நிகழ்ச்சிகளை, மாதம் இருமுறை அங்கன்வாடிகளில் நடத்தி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஆக-201921:17:27 IST Report Abuse
ஆப்பு ஒரு பக்கம் மக்கள் தொகை கடுக்கடங்காம போகுதுன்னு பேசுனாரு ஒரு பெரியவர். மறுபக்கம் இப்பிடி... ஒரு குழந்தைக்கு மேல் வேணாம்னு சொல்லுங்கப்பா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X