தூக்கத்தில் உணவுத்துறை திறந்தவெளியில் தயாராகுது உணவுகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
00:51

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் கிராமங்கள் முதல் நகர் வரை கழிவுநீர் வாறுகால்கள் மீது அடுப்புகள் வைத்து திறந்தவெளியில் தயாரிக்கபடும் உணவுகளால் மக்கள் நோய்களுக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.




இதில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் நடந்து கொள்வதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.மாவட்டத்தில் டீக்கடைகள், உணவகங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் விற்பனை அங்காடிகள் செயல்பட உணவுபாதுகாப்புத்துறையில் பதிவு செய்யபட்டு சான்றிதழ்கள் பெறவேண்டும். சான்றிதழ்கள் பெறபட்ட நிறுவனங்களில் அவ்வப்போது ஆய்வு செய்து உணவு பொருட்களின் தரத்தை, பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். திறந்தவெளியில் தயாரிக்கபடும் உணவுகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பாதுகாப்பான, சுகாதாரமான முறையில் உணவு தயாரிப்பதும் குறித்து கடைக்காரர்களிடம் விளக்கமளிக்க வேண்டும்.




அதை கடைபிடிக்கதவறினால் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கவேண்டும். ஆனால் மாவட்டத்தில் சாலையோர டீக்கடைகள், உணவகங்களில் கழிவுநீர் வாறுகால்கள் மீது அடுப்பு வைத்து திறந்தவெளியில் உணவுகள் தயாரிக்கபடுகிறது. ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளில் தினசரி துப்பரவு பணிகள் நடக்காததால் வாறுகால்களில் கழிவுகள் தேங்கி சுகாதாரகேடு, துர்நாற்றம் ஏற்படுகிறது. ரோட்டோர துாசிகளும் உணவுகள் மீது படிகிறது. இவ்வாறு சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கபடும் உணவுகளால் அப்பாவி மக்கள்தான் பாதிக்கின்றனர். உணவுபாதுகாப்புத்துறை சாலையோர உணவகங்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாது அலட்சியத்துடன் உள்ளது .




இதனால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் திறந்தவெளியில் உணவுகள் தயாரித்து சுகாதாரமற்றமுறையில் விற்பனை செய்யும் நிலை தொடர்கிறது. இதை ஒழுங்குபடுத்த மாவட்ட நிர்வாகம்தான் உணவுபாதுகாப்புத்துறைக்கு அறிவுறுத்த வேண்டும்.இல்லையே விழிப்புணர்வுஉணவு பொருட்கள் தயாரித்தல் விற்பனைக்கு சான்றிதழ்கள் பெறவேண்டும் என வணிகநிறுவனங்களை வலியுறுத்தும் அதிகாரிகள் ,கழிவுநீர் வாறுகால்கள் மீது அடுப்புகள் வைத்து சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கபடும் உணவுபொருட்கள் விற்பனை செய்வதை தடுப்பது இல்லை.



இதனால் மாவட்டத்தில் சிறுகிராமங்கள் முதல் நகரங்கள் வரை துாசி பறக்கும் உணவுகள் தான் மக்களுக்கு வழங்கப்படுகிறது. பாதுகாப்பான, சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து விற்பதற்கான விழிப்புணர்வை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை ஏற்படுத்த வேண்டும். ராஜேஸ்வரி, வழக்கறிஞர், ஸ்ரீவில்லிபுத்துார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X