| அண்ணாகிராமத்தில் தேர்தல் ஆணையர் ஆய்வு Dinamalar
அண்ணாகிராமத்தில் தேர்தல் ஆணையர் ஆய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
00:57

பண்ருட்டி: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆயத்த பணிகள் குறித்து, அண்ணாகிராமம் ஒன்றிய அலுவலகத்தில், தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி நேற்று ஆய்வு செய்தார்.தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி நேற்று அண்ணாகிராமம் பி.டி.ஓ. அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.கடந்த 2016ல் உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக வழங்கப்பட்ட கையேடுகள், படிவங்கள், மீதம் இருப்பு வைத்துள்ள கையேடுகளை ஆய்வு செய்தார். சட்டசபை வாக்காளர் பட்டியலில் இருந்து உள்ளாட்சி வார்டு வாரியாக பிரித்தெடுத்து பதிவேற்றம் செய்ததை கணினியில் பார்வையிட்டார். ஆய்வின்போது கலெக்டர் பழனிசாமி, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் காஞ்சனா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன், அண்ணாகிராமம் பி.டி.ஒ., க்கள் சரவணன், சக்தி, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X