வடவாற்று பாலத்தில் விரிசல் நான்கு கிராம மக்கள் அச்சம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
01:01

காட்டுமன்னார்கோவில்: வடவாற்று பாலம் உள்வாங்கியதால், நான்கு கிராம மக்கள் நகர பகுதிகளுக்கு செல்ல முடியாமல் அவதி அடைகின்றனர். காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள சிறுகாட்டூர், அல்லியூர், குச்சூர், புத்துார் கிராமங்களில், 3,000 பேர் வசிக்கின்றனர். வடவாற்றங்கரை ஓரத்தில், உள்ள இக்கிராம மக்கள் நகர பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால், வடவாற்றினை கடந்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் மீன்சுருட்டி பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வடவாற்றின் குறுக்கே மூங்கில் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் அடிக்கடி உடைந்ததன் காரணமாக, புதிய வீராணம் திட்டத்தின் கீழ் வடவாற்றின் குறுக்கே, கடலூர், அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் சிமென்ட் பாலம் அமைக்கப்பட்டது.தற்போது வடவாற்றின் வழியாக வீராணம் ஏரிக்கு அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. இதன் காரணமாக பாலத்தின் ஒருமுனையில் விரிசல் ஏற்பட்டு உள் வாங்கி உள்ளது. இதனால், நான்கு கிராம மக்கள் நகர பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மழை காலம் துவங்க உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மேலும் பாலம் உள்வாங்காமல் இருக்கும் பொருட்டு, வடவாற்றில் தண்ணீரை குறைத்து பாலத்தினை சீர்செய்ய வேண்டும் என, இக்கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X