| பைக் மோதியதில் முதியவர் பலி  Dinamalar
பைக் மோதியதில் முதியவர் பலி 
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
01:03

பெண்ணாடம்: பைக் மோதிய விபத்தில், முதியவர் இறந்தார்.பெண்ணாடம் அடுத்த கணபதிகுறிச்சியை சேர்ந்தவர் மாயவேல், 63; கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் முருகன்குடியில் இருந்து கணபதிகுறிச்சிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். வெள்ளாறு மேம்பாலம் சென்றபோது, அவ்வழியே வந்த பதிவெண் இல்லாத புதிய பைக் மோதி படுகாயமடைந்தார்.உடன் அவர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று அதிகாலை இறந்தார்.கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X