| கொள்ளை அடிக்க பதுங்கிய கும்பல் Dinamalar
கொள்ளை அடிக்க பதுங்கிய கும்பல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
01:04

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகரில், கொள்ளை அடிக்க திட்டம் தீட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார், நேற்று அதிகாலை 2.30 மணியளவில் முத்தையா நகர் பாலம் அருகே ரோந்து சென்றனர்.அப்போது அங்குள்ள கருவை காட்டில், 5 பேர் கொண்ட கும்பல் கருப்பு துணி மற்றும் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது. போலீசார் 4 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடி விட்டார்.போலீசார் விசாரித்ததில், அவர்கள் அண்ணாமலை நகர் வடகிருப்பு பட்டித்தெருவை சேர்ந்த ரவி மகன் செல்வம் என்கிற செல்வராஜ், 24; குறிஞ்சிப்பாடி தாலுகா, மேல்பூவாணிகுப்பத்தை சேர்ந்த பவுன்காசு மகன் அதித்யா, 24; வடக்கிருப்பு பட்டித் தெருவைச் சேர்ந்த ரவி மகன் கொக்கிகுமார் என்கிற விஜய குமார், 24; அண்ணாமலைநகர் சிவன்கோவில் தெருவை சேர்ந்த செல்வம் மகன் மாணிக்கவேல், 22; என்பது தெரிய வந்தது.தப்பி ஓடியவர் அண்ணாமலை நகர் மண்ரோட்டை சேர்ந்த சக்திவேல் மகன் மர்டர் பாபு என்கிற பாபு, 35;என்பதும், இவர்கள் கூட்டு கொள்ளை அடிப்பதற்காக பதுங்கி இருந்ததும் தெரிய வந்ததது.இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து 4 பேரை கைது செய்தனர். பாபுவை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X