விருதை - ஜெயங்கொண்டம் சாலையில் மறியல், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
01:04

பெண்ணாடம்: விபத்தில் இறந்த துப்புரவு பணியாளரின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கக்கோரி, கிராம மக்கள் விருதை - ஜெயங்கொண்டம் சாலையில், மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த டி.வி.புத்துார் காலனியை சேர்ந்தவர் பாண்டியன், 35; ஊராட்சி துப்புரவு பணியாளர். இவர் கடந்த 14ம் தேதி ஊராட்சிக்கு தேவையான குடிநீர் குழாய் உபகரணங்கள் வாங்கிக்கொண்டு ஸ்கூட்டியில் விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் சாலையில் சென்று கொண்டிருந்தார். டி.வி.புத்துார் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பின்னால் வந்த மகேந்திரா கார் (டிஎன் 36 ஏஎல். 8334) மோதியதில் காயமடைந்தார். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் இறந்தார்.பிரேத பரிசோதனை முடிந்து, அவரது உடல் நேற்று மாலை 5:30 மணியளவில், டி.வி.புத்துாருக்கு வந்தபோது, அவரது உடலை வாங்க மறுத்து கிராம மக்கள், உறவினர்கள், விருதை - ஜெயங்கொண்டம் சாலையில் டி.வி.புத்துார் பஸ் நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்டனர். பாண்டியனின் குடும்பத்திற்கு அரசு வேலை; நிவாரணம் மற்றும் பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். தாசில்தார் கவியரசு மற்றும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இரவு 7:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் விருதை - ஜெயங்கொண்டம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X