| மேட்டமலை பட்டாசு விபத்தில் விதிமீறல் Dinamalar
மேட்டமலை பட்டாசு விபத்தில் விதிமீறல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
01:05

24.08.19/சாத்துார்/நிருபர்,கருப்பசாமி,96777 60853/24.08.19/விருதுநகர்/ எடிட்1:ஆர்.சுப்பையா/24.08.19/ மதுரை/ எடிட்2:......................சாத்துார், ஆக. 25- சாத்துார் மேட்டமலை அனுமதி இல்லா கட்டடத்தில் பட்டாசுகள் மற்றும் வெடிகள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களை வைத்தபோது வெடி விபத்து ஏற்பட்டது தெரியவந்த நிலையில், விபத்தில் இறந்த பட்டாசு அதிபர் மற்றும் இவரது மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிவகாசி அருகே விஸ்வநத்தத்தை சேர்ந்த ரமேஷ் 40 . தனியார் பட்டாசு ஆலையை குத்தகைக்கு எடுத்து பட்டாசுகள் தயாரித்து விற்பனை செய்து வந்தார். மனைவி ரேவதி 35, க்கு சொந்தமான மேட்டமலை வசந்தம்நகரில் உள்ள இடத்தில் பட்டாசுக்கடைக்கு கட்டடம் கட்டி உள்ளார். கடை அனுமதிக்கு வருவாய் , தீயணைப்பு துறையில் விண்ணப்பித்துள்ளார். அனுமதி வழங்கவில்லை. கடந்த ஆக.23 இரவில் புதியதாக கட்டிய கட்டடத்தில் பேன்சிரக பட்டாசு , இதன் தயாரிப்புக்கு பயன்படும் பொட்டாசியம், சல்பர், கார்பன்நைட்ரேட், குளோரைடு, வெடிஉப்பு,கரிதுாள் உள்ளிட்ட கனிமங்களை காரில் கொண்டு வந்தார்.
விஸ்வநத்தம் தொழிலாளிகள் தர்மர், விஜயபாண்டி, விக்னேஷ்வரன், கருப்பசாமி உடன் சேர்ந்து கடையில் இறக்கி வைத்துள்ளார்.விதிமீறலால் விபத்து பட்டாசு கனிமங்கள் வைப்பு அறையில் ரப்பர் சீட் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இக்கட்டடத்தில் ரப்பர் சீட் பொருத்தவில்லை. இதனால் இறக்கி வைத்த போது உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது. வெளியே நின்ற விஜயபாண்டி, விக்னேஷ்வரன், கருப்பசாமி மீது கட்டடத்தின் செங்கற்கள் விழுந்ததால் காயத்துடன் உயிர் தப்பினர். கட்டடத்தின் உள்ளே இருந்த ரமேஷ், தர்மர் உடல் சிதறி பலியாகினர்.போலீஸ் விசாரணையில், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்க ரமேஷ் , ரேவதி ஆகியோர் பட்டாசுக்கான மூலப்பொருட்களை கள்ள மார்க்கெட்டி வாங்கியதும் தெரியவந்துள்ளது. இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 8 கீ.மீ., துாரத்திற்கு சப்தம்வெடிவிபத்தின் போது ஏற்பட்ட வெடி சப்தம் 8 கீ.மீ., துாரத்திற்கு எதிரொலித்தது. இதை நில அதிர்வு போல் மக்கள் உணர்ந்தனர். பலர் வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்த திகைத்துள்ளனர். இது போன்ற சம்பவம் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நடந்ததால் பெரும் உயிர் சேதம் ஏற்படவில்லை.
நகர் , மெயின்ரோட்டின் அருகில் நடந்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். பட்டாசுக்கடை, பட்டாசு கோடவுன் பெயரில் இது போன்று விதிகளை மீறி பட்டாசு தயாரிப்பவர்கள் ,பதிக்கி வைத்திருப்பவர்களை கண்டறிந்து தடுக்க மாவட்ட நிர்வாகம் தற்போதே களத்தில் இறங்க வேண்டியது அவசியமாகிறது.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X