திருவிளையாடல் இடம் பெற்ற இருஞ்சிறை ஐந்தாயிரம் ஆண்டு முன் நடந்த அரும் சிறப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
01:09

நரிக்குடி : மனிதன் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக்கூடாது, நன்மை எது, தீமை எது, கோபம், வெறுப்பு, பொறாமை உள்ளிட்ட தீய குணங்களை அகற்றி, தானம், தர்மம் செய்து உதவும் குணத்துடன் மற்றவர்களிடத்திலும் அன்பு காட்ட வேண்டும்.




அதற்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்பதற்காக தான் கடவுள் பல்வேறு அவதாரங்களாக பூலோகத்தில் அவதரித்தார் என வரலாற்றுச் சான்றுகள் எடுத்துரைக்கின்றன. இச்சான்றுகளுக்கு திருச்சுழி, நரிக்குடி பகுதி முக்கிய பங்கு வகிக்கிறது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் நரிக்குடி இருஞ்சிறையில் ஆதிஈஸ்வரன் சுயம்பாக உருவெடுத்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். இங்கும் திருவிளையாடலை நடத்த அப்பகுதியை செல்வ செழிப்பாக மாற்றினார். பாண்டிய மண்டலத்தில் இப்பகுதி முக்கிய நெற்களஞ்சியமாக இருந்ததால் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.



பாண்டிய மன்னன் ஈஸ்வரன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். இதை சோதிக்க பாண்டிய நாட்டில் வறட்சி , வறுமையை ஏற்படுத்த வருண பகவானை அப்பகுதியில் மழை பொழிய விடாமல் தடுத்தார். இதை அறிந்த பாண்டிய மன்னன், ஈஸ்வரன் மீது கொண்டிருந்த பக்தியை பயன்படுத்தி வருண பகவானை [மேகத்தை] சிறைபிடித்து ஊரணி, குளங்களை வெட்டி அதில் தவளைகளை விட்டு ஒலி எழுப்பசெய்தார். அப்பகுதியில் மழை பொழிவை ஏற்படுத்தி விவசாயம் செழிக்க வைத்தார் மன்னன்.




அதன்பின் பாண்டிய நாடு வறட்சியிலிருந்து மீண்டது. கட்டுநல்லுாரில் வருண பகவானை கட்டி வைத்ததால் கட்டு நல்லுாரிருஞ்சிறை என்று அழைக்கப்பட்டு பின்னாளில் இருஞ்சிறை என இவ் ஊர் அழைக்கப்படுகிறது. இத்தளத்தில் நடக்க இருந்த திருவிளையாடலை முன்கூட்டியே மனதில் கொண்டு என்னை திருமணம் செய்ய கன்னியாகுமரியில் தவம் இருக்க வேண்டும். அப்போது உன் முன் தோன்றி உன்னை திருமணம் செய்வேன். அதற்கு நீ இருஞ்சிறையில் சிறுமியாக தோன்றி அந்த ஊரிலே தங்கி, நமக்கென்று ஒரு கோயில் கட்ட வேண்டும் என பார்வதி தேவியிடம் ஆணை பிறப்பித்தார் ஈஸ்வரன் .




கோயில் கட்ட பணம், பொருள் வேண்டுமே என்ன செய்வது என கேட்க ஓம் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து வேலை செய்யும் ஆட்களுக்கு விபூதியை கொடு. அவர்கள் செய்த வேலைக்கு கூலி அதில் இருக்கும் என சொல்லி கட்டப்பட்டதுதான் இங்குள்ள ஆதிஈஸ்வரன் கோயில். தற்போது கோயில் சிதிலமடைந்தாலும் மரத்தடியில் உள்ள சுயம்பு, நந்தி சிலைகளை கோடிலிங்கேஸ்வரராக அக்கிராமத்தினர் வழிபட்டு வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X