விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள்: பல இடங்களில் பரபரப்பு விற்பனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
01:14

திருப்பூர்:விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு தயாராக உள்ளன.வரும், செப்., 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பல்வேறு இந்து அமைப்பினர், சமூக நல அமைப்பினர், தொண்டு அமைப்பினர் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் பிரதிஷ்டை செய்து, வழிபட்டு நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.


திருப்பூரில், இந்த ஆண்டு, சற்று முன்னதாக, இப்போதே விநாயகர் சிலை விற்பனை தொடங்கியுள்ளது.நகரில், பூலுவப்பட்டி, புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், குமரன் ரோடு, பல்வேறு பகுதிகளில், சாலையோரங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. யாழி விநாயகர், சிம்ம வாகன விநாயகர், குதிரை வாகன விநாயகர், கருட வாகன விநாயகர், சித்திபுத்தி விநாயகர், ஆஞ்சநேய விநாயகர், சிவன் பார்வதியுடன் உள்ள விநாயகர் என, 150க்கும் மேற்பட்ட வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு உள்ளன.குறிப்பாக, 3 அடி முதல், 10 அடிவரை உள்ள இந்த சிலைகள் விலை, ஆயிரம் ரூபாய் முதல், 8 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.


பொதுமக்கள் இப்போதே விநாயகர் சிலைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதாகவும், விநாயகர் சிலைகளை வாங்குவதற்கு சிலர் முன்பதிவு செய்வதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.வியாபாரிகள் கூறுகையில், 'களிமண்ணால் தயாரிக்கப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த விநாயகர் சிலைகள் 60 முதல் 600 வரை விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல், காகித கூழால் ஆன சிலைகளும் அதிகளவில் விற்கப்படுகின்றன,' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X