| உரிய திட்டத்தை அறிய முடியாமல் தவிப்பு: மாற்றுத்திறனாளிகள் வேதனை Dinamalar
உரிய திட்டத்தை அறிய முடியாமல் தவிப்பு: மாற்றுத்திறனாளிகள் வேதனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
01:20

திருப்பூர்:அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாமல் உள்ளதால், மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம், 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் செயல்படுத்தப்படும் உதவித் திட்டங்கள் மற்றும் அவர்களது உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, தெருமுனை நாடகங்கள் மற்றும் சாலை விளக்க நிகழ்வுகள் நடத்த, அரசு உத்தரவிட்டுள்ளது.அதற்காக, நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள், சலுகைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 ன் சாராம்சம்களை காட்சிப்படுத்த வேண்டும். தவிர, விளம்பர பலகைகள் ஏற்பாடு செய்வதோடு அல்லாமல் திட்டங்களின் விபரங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து வினியோகிக்க வேண்டும்.ஆனால், இதுநாள் வரை, அதற்கான பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. மாற்றுத் திறனாளிகள் கூறுகையில், ''மாற்றுத்திறனாளிகள் பலர், உரிய திட்டங்களை அறிய முடியாமலும், சலுகைகள் பெற முடியாமலும் தவித்து வருகின்றனர்.தெருமுனை நாடகங்கள் மற்றும் சாலை விளக்க நிகழ்வுகள் நடத்த நிதி ஒதுக்கீடு செய்தும் நடவடிக்கை இல்லை. பலரும் பாதிக்கின்றனர். ஒவ்வொரு முறையும் அலுவலகத்துக்கு நேரடியாக வந்து சென்று தகவல்களை கேட்டு பெற வேண்டியுள்ளது,' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X