'ஜல் சக்தி அபியான்' திட்டம் சிறப்பு கிராம சபா கூட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
01:21

திருப்பூர்:மழைநீர் சேகரிப்பு திட்டத்தை உணர்வுப்பூர்வமாக செயல்படுத்த வேண்டுமென, சிறப்பு கிராமசபா கூட்டங்களில் அறிவுறுத்தப்பட்டது.'ஜல் சக்தி அபியான்' திட்டக்குழுவினர், கடந்த நான்கு நாட்களாக, திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.மொத்தம், எட்டு குழுவாக பிரிந்து, நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர். மழைநீர்சேகரிப்பு, தண்ணீர் பாதுகாப்பு, குடிநீர் சிக்கன விழிப்புணர்வு பணிகளை பார்வையிடுகின்றனர்.மக்களிடையே, மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்டம் முழுவதும் நேற்று சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது. 13 ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 265 கிராம ஊராட்சிகளிலும், சிறப்பு கிராம சபா கூட்டம் நேற்று நடந்தது.அனைத்து வீடுகள், தொழிற்சாலைகளிலும், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் கட்டமைப்பு செய்ய வேண்டும்.பள்ளி கட்டடம் உட்பட, அரசு கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு திட்டம் முழு அளவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மழைநீர் வீணாவதை தடுத்து, முழுவதும் சேகரித்து, நிலத்தடி நீரை செறிவூட்ட வேண்டும்.தண்ணீர் மற்றும் குடிநீரை, சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; வீணாக விரயம் செய்யக்கூடாது. வீடுகள் தோறும், காலியிடங்களில் மரக்கன்று நட்டு வளர்க்க வேண்டும். அரசு நிலத்தில் உள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி, பாதுகாக்க வேண்டும் என, கிராம சபாவில் அறிவுறுத்தப்பட்டது.திருப்பூர் ஒன்றியத்தில் நடந்த கிராமசபா கூட்டங்களில், பி.டி.ஓ., கனகராஜ் பங்கேற்று, மழைநீர் சேகரிப்பு மற்றும் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X