| வாலிபரின் உடல் உறுப்பு தானம் ஏழு பேருக்கு மறுவாழ்வு Dinamalar
வாலிபரின் உடல் உறுப்பு தானம் ஏழு பேருக்கு மறுவாழ்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
01:28

சென்னை:மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்பு தானத்தால், ஏழு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.



சென்னை, மாதவரம், அருள் நகரைச் சேர்ந்தவர், அருள்மேரி அமுதா. சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், பதிவேடு அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன், வினோத் குமார், 26, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.கடந்த, 15ல், செங்குன்றம் பகுதியில் நடந்த, நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு, இருசக்கர வாகனத்தில் சென்று, வீடு திரும்பும்போது, வேக தடையில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த அவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.


இந்நிலையில், நேற்று முன்தினம், சிகிச்சை பலனின்றி, மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து, வினோத்குமாரின் உடல் உறுப்புகளை தானமளிக்க, அவரது தாய், அருள்மேரி அமுதா முன்வந்தார். அதன்பின், கல்லீரல், இரண்டு சிறுநீரகம், இரண்டு கண்கள், இதயம், தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டன.இதன் வாயிலாக, ஏழு பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X