| மீன், இறால் பண்ணை விவசாயிகள் தரமான தீவனம் பயன்படுத்த அறிவுரை Dinamalar
மீன், இறால் பண்ணை விவசாயிகள் தரமான தீவனம் பயன்படுத்த அறிவுரை
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
01:28

விழுப்புரம்: மீன் மற்றும் இறால் பண்ணை வளர்ப்பு விவசாயிகள், பி.ஐ.எஸ்., தர தீவனங்களை பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.கலெக்டர் சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு:இந்திய அரசால் மீன் மற்றும் இறால் வளர்ப்பிற்கு தேவைப்படும் தீவனத்திற்காக பி.ஐ.எஸ்., தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மீன் பண்ணை மற்றும் இறால் பண்ணை விவசாயிகள் பி.ஐ.எஸ்., தரச்சான்று உள்ள மீன் தீவனங்களை பயன்படுத்த வேண்டும்.தீவன உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பி.ஐ.எஸ்., தரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட தீவனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.பி.ஐ.எஸ்., தர நிர்ணயத்தில் தகுந்த தரம் கொண்ட மீன் துாள், சோயா பீன்ஸ், தாவர எண்ணெய், வைட்டமின்கள் மற்றும் இதர பொருட்கள் கலந்த தரமான மீன் தீவனம், மீன், இறால் வளர்ப்போருக்கு கிடைத்திட தமிழக அரசால் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.தர முத்திரை இல்லாத மீன், இறால் தீவனம் உற்பத்தி அல்லது விற்பனை செய்பவர் குறித்து தகவல் கிடைத்தால், மீன்துறை உதவி இயக்குநர், நித்தியானந்தம் நகர், வழுதரெட்டி விழுப்புரம் என்ற முகவரிக்கோ அல்லது 04146--259329 என்ற தொலைபேசியில் தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X