ரிஷிவந்தியம்: மணல் கடத்திய டிராக்டர் டிப்பரை போலீசார் பறிமுதல் செய்தனர்.பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது எடுத்தனுாரில் இருந்து ஓடியந்தல் வழியாகச் சென்ற மகேந்திரா டிராக்டர் டிப்பரை சோதனை செய்ததில் மணல் கடத்தியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்து, டிரைவர் சங்கராபுரம் அடுத்த மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மோயிசன் மகன் கபிரியேல், 47; என்பவரை கைது செய்தனர்.