விபத்து ஏற்படுத்திய தொழிலதிபர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
01:30

தி.நகர்: நீலாங்கரையைச் சேர்ந்தவர், சத்திய நாராயணன், 50; தொழில் அதிபர். இவரது தந்தை பாபு, 85, தி.நகர் விஜயராகவபுரத்தில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, தந்தையை பார்க்க, சத்தியநாராயணன், தி.நகருக்கு காரில் சென்றார். தி.நகரில் உள்ள வீடு முன், அடையாளம் தெரியாத, 48 வயது மதிக்கத்தக்க நபர், மது போதையில் படுத்து துாங்கி உள்ளார். எதிர்பாராத விதமாக, போதையில் படுத்திருந்த நபர் மீது, சத்தியநாராயணன் வந்த கார் ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். சத்தியநாராயணனை கைது செய்த போலீசார், இறந்த நபர் யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.


2 டன் செம்மர கட்டைகள் பறிமுதல்


பிராட்வே: பூக்கடை துணை கமிஷனர், ராஜேந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு, மண்ணடி மூர் தெருவில், செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, தனிப்படை போலீசார், மூர் தெருவில் உள்ள தனியார் குடோனில் ஆய்வு செய்தனர். அங்கு, 2 டன் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த, நவாப், 37, என்பவரை, கைது செய்தனர். பறிமுதலான செம்மரக்கட்டைகள், தேனாம்பேட்டை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.


காலாவதியான நொறுக்குத்தீனிகள்


நொளம்பூர்: புழல் -- தாம்பரம் நெடுஞ்சாலை, முகப்பேர் அருகே அணுகு சாலையோரம், நேற்று முன்தினம் மர்ம நபர்கள், காலாவதியான நொறுக்குத்தீனி பாக்கெட்டுகளை, குப்பை மேட்டில் கொட்டி சென்றனர். அப்பகுதி மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள், காலாவதியான நொறுக்குத்தீனி பாக்கெட்டுகளை அள்ளி சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த நொளம்பூர் போலீசார், நொறுக்குத்தீனிகளை ஆய்வு செய்தனர். அவை, ஓராண்டிற்கு முன், காலாவதியானது என தெரிந்தது. இதையடுத்து, அனைத்தையும் தீயிட்டு எரித்தனர். மேலும் கொட்டி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X