குரூப் - 4 தேர்வர்களுக்கு இலவச ஊக்க முகாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
01:30

சென்னை:டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' தேர்வு எழுத உள்ளோருக்காக, அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கும், போட்டி தேர்வுகள் பயிற்சி மையம் சார்பில், ஒருநாள் இலவச ஊக்க முகாம், சென்னையில் நடந்தது.


மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார், முகாமை துவக்கி வைத்தார். தேர்வுக்கு தயாராக உள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அறிவுரை வழங்கி, தேர்வு கையேடுகளை வழங்கினார்.வேதியியல், இயற்பியல், விலங்கியல், நாட்டு நடப்பு போன்றவற்றில் கேள்வி கேட்டு, சரியான பதில் அளித்தோருக்கு, பரிசுத் தொகை வழங்கினார்.அண்ணா மேலாண்மை நிலையம் இயக்குனர், இறையன்பு, போட்டி தேர்வுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசு செயலர், ஸ்வர்ணா, ''இப்பயிற்சி மையம் வழியே பயிற்சி பெற்று, தேர்வானோர், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அதேபோல், தற்போதைய பயிற்சியாளர்களும், தேர்வு பெற வேண்டும்,'' என, வாழ்த்தினார்.துாத்துக்குடி மாநகராட்சி கமிஷனர், ஜெயசீலன், போட்டி தேர்வுகள் பயிற்சி மைய முதல்வர் ஸ்டெல்லா, ராணிப்பேட்டை சப் - கலெக்டர், இளம்பகவத், திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கணக்கு அலுவலர், அருணாச்சலம் ஆகியோர், தேர்வுக்கான குறிப்புகளையும், பாட நுணுக்கங்களையும் தெரிவித்தனர்.முகாமில் பங்கேற்றோருக்கு, 'குரூப் - 4' பாடத்திட்டம், அனைத்து பாடங்களுக்கான, மாதிரி வினாக்கள், முந்தைய ஆண்டு கேள்வி - பதில் தொகுத்த கையேடு, குறிப்பு நோட்டு அடங்கிய பைல் ஆகியவை வழங்கப்பட்டன.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X