| ஆவடி தொழிற்சாலை போராட்டம் ஒத்திவைப்பு Dinamalar
ஆவடி தொழிற்சாலை போராட்டம் ஒத்திவைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
01:32

ஆவடி:ஆவடியில், பாதுகாப்புத் துறை தொழிலாளர்கள், வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர்.


ஆவடியில், மத்திய அரசின் படை உடை தொழிற்சாலை, கனரக வாகன தொழிற்சாலை, இன்ஜின் தொழிற்சாலை உள்ளிட்ட பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் உள்ளன.இந்த தொழிற்சாலைகளை, பொதுத்துறை நிறுவனமாக மாற்ற, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதை எதிர்த்து, பாதுகாப்புத் துறை தொழிலாளர்கள், 20ம் தேதியில் இருந்து, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இது தொடர்பாக, அனைத்து தொழிற்சங்க சம்மேளன தலைவர்களுடன் நடந்த பேச்சுக்கு பின், நேற்று தற்காலிகமாக வேலை நிறுத்த போராட்டத்தை ஒத்தி வைக்க முடிவெடுத்துள்ளனர்.இது குறித்து, தொழிற்சங்கத்தினர் கூறுகையில், 'பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது' என்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X