கிருஷ்ண ஜெயந்தி உற்சவம்: உடுமலையில் இன்று துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
01:36

உடுமலை:உடுமலை, நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், ஜெயந்தி உற்சவ விழா இன்று துவங்குகிறது.உடுமலை, பெரியகடை வீதியிலுள்ள நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில் உள்ள, பூமீநீளா நாயகி சமேத சீனிவாசபெருமாளுக்கு, கிருஷ்ண ஜெயந்தியை தொடர்ந்து ஜெயந்தி விழா நடக்கிறது.இன்று, துவங்கி, செப்., 2ம்தேதி வரை விழா நடக்கிறது. விழாவில், நாள்தோறும், கிருஷ்ணர் அவதரித்த நிகழ்வுகளை பெருமாளின் சிறப்பு அலங்காரமாக செய்து பூஜை நடக்கிறது.இன்று, மாலை, 4:00 மணிக்கு கண்ணன் பிறந்த சந்தான கோபால கிருஷ்ணன் சேவை மற்றும் திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, சென்னியோங்கு, பாசுரங்கள் சேவையும் இடம் பெறுகின்றன.நாளை முதல் நாள்தோறும் மாலை, 4:00 மணிக்கு கிருஷ்ணரின் பிறப்பு முதல் அவதாரம், தவழும் கண்ணன், வெண்ணைத்தாழி கண்ணன், வித்யா ராஜகோபாலன், கோவர்த்தனகிரி கண்ணன், புன்னை மரக்கண்ணன், கண்ணன் உறியடி உற்சவம் நடக்கிறது.வரும் 31ம்தேதி தெப்போற்சவம் காளிங்கன் மடுவில் நர்த்தன கண்ணன், செப்., 1ம்தேதி கிருஷ்ணன் விஸ்வரூப தரிசனம், 2ம்தேதி வாரணமாயிரம் பாசுரங்கள் சேவையுடன் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.ஜெயந்தி உற்சவத்தில், திருப்பாவை, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி, பெரிய திருமொழி, திருகுறுந்தாண்டகம், இயற்பாபிரபந்தம், நாலாயிர திவ்ய பிரபந்த பஜனை, திருவாய்மொழி பத்து பாசுரங்கள் சேவை நடக்கிறது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X