பெற்றோர் தான் குழந்தைகளின் முதல் ஆசிரியர்: உளவியல் ஆலோசனை நிகழ்ச்சியில் தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
01:36

உடுமலை;'பெற்றோர் தான் குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள்' என உடுமலை பள்ளியில் நடந்த உளவியல் ஆலோசனை நிகழ்ச்சியில், பயிற்சியாளர் ரத்னசாமி பேசினார்.உடுமலை, ஆர்.கே. ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு குழந்தை வளர்ப்பு குறித்து உளவியல் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.குழந்தைகளின் கல்வி எதை நோக்கி இருக்க வேண்டும்.


குழந்தைகளின் உளவியல் குறித்து பெற்றோரின் பார்வை, அவர்களின் மனநிலையை அறிந்து கொள்வது, பெற்றோரின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து இந்நிகழ்ச்சி நடந்தது.பள்ளி முதல்வர் மாலா வரவேற்றார். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு குழந்தைகளின் பெற்றோருக்கு, உளவியல் பயிற்சியாளர் ரத்னசாமி ஆலோசனை வழங்கினார்.அதில், உயிர் எழுத்துகளில் ஒவ்வொன்றிலும் குழந்தைகளின் வளர்ப்பும் உள்ளது. குழந்தைகளிடம் அன்பாக இருப்பதற்கும், அவர்களின் விருப்பத்துக்கு மட்டுமே நடப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை பெற்றோர் அறிய வேண்டும். பெற்றோரிடம் குழந்தைகள் பெறும் அன்பை அவர்கள் மற்றவர்களிடமும் செலுத்துகின்றனர். உணவு பழக்க வழக்கங்கள் பெற்றோரிடமிருந்து தான் குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர்.ஆரோக்கியமான உணவு முறைகளை, குழந்தைகளுக்கு அளிப்பது மட்டுமின்றி, பெற்றோரும், பின்பற்ற வேண்டும். பெற்றோர் தான் தங்களின் முன்மாதிரிகளாகவும், ஆசிரியர்களாகவும் இருப்பதாக குழந்தைகள் நம்புகின்றனர்.குழந்தைகளிடம், பெற்றோர் இயல்பாக இருக்க வேண்டும்.


குழந்தைகள் தங்களின் முன்னேற்றத்துக்கு முயற்சிக்கும் போது, பெற்றோரும் அதில் ஈடுபாடு காட்டி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்கும் உற்சாகம் அவர்களின் வெற்றிக்கான வழியாக இருக்கும்.இவ்வாறு, அவர் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து, குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செல்வராஜ், வளர் இளம் பருவ மாணவர்களுக்கு, உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கினார். பள்ளி ஆசிரியர்களுக்கும், ஆலோசனை வகுப்புகள் நடந்தன.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X