| கல்வி தொலைக்காட்சி நாளை துவக்கம்: பள்ளிகளில் ஏற்பாடு செய்ய உத்தரவு Dinamalar
கல்வி தொலைக்காட்சி நாளை துவக்கம்: பள்ளிகளில் ஏற்பாடு செய்ய உத்தரவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
01:36

உடுமலை:அரசின் சார்பில், நாளை 'கல்வி தொலைக்காட்சி' துவக்கப்படுவதால், பள்ளிகளில் அதற்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், மாணவர்களுக்கு கல்வி தொடர்பான அனைத்து தகவல்களை வெளியிட்டும், பல்வேறு புதிய முயற்சிகளை செய்து வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெருமைகளை, அனைத்து பள்ளிகளுக்கும் தெரியப்படுத்தவும், அரசின் சார்பில் கல்வித்துறைக்கென, கல்வி தொலைக்காட்சி சேனல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சில நாட்களாக, இந்த சேனல் சோதனை அடிப்படையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.நாளை, (26 ம்தேதி) முதல், அதிகாரப்பூர்வமாக ஒளிப்பரப்புவதற்கு அரசு அறிவித்துள்ளது. நாளை, காலை, 9:00 மணிக்கு கல்வி தொலைகாட்சிக்கான துவக்க விழா நடக்கிறது.இதனை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் நேரடியாக காண்பதற்கு, தயார் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அனைத்துப்பள்ளிகளிலும் 'டிவி'க்களை, நிகழ்ச்சி காண்பதற்கு செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.'டிவி' இல்லாதவர்கள், மாற்று ஏற்பாடாக, கம்ப்யூட்டர் அல்லது லேப்-டாப் மூலமாக மாணவர்கள் இந்நிகழ்ச்சியை காண்பதற்கு, ஏற்பாடு செய்துகொள்ள வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவித்துள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X