மதுரை : மதுரை மாநகராட்சி சார்பில் முத்துப்பட்டியில் ரூ.27.80 லட்சம் மதிப்பில் தார்ரோடு அமைக்கும் பணியை அமைச்சர் செல்லுார் ராஜு துவக்கி வைத்தார். கமிஷனர் விசாகன் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் கூறியதாவது: மதுரை மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மற்றும் நீர்நிலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நகரில் பழிக்கு பழி கொலை நடப்பதை பார்த்து சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது எனக்கூற முடியாது. முன்னாள் அமைச்சர் சிதம்பரம் மேல்மட்ட அரசியல்வாதி. அவரது கைது தமிழக மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, என்றார்.