கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி பகுதிகளில் தேதி குறிப்பிடாத காலாவதியான தண்ணீர் பாட்டில்கள் விற்பனை குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் சோமசுந்தரம் தலைமையில் அலுவலர்கள் சண்முகம், கண்ணன், கோவிந்தன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். கடைகளில் காலாவதியான தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.