| நிறைவு! 'விதைப்பது முதல் அறுவடை வரை... விவசாய கண்காட்சி இன்றுடன் Dinamalar
நிறைவு! 'விதைப்பது முதல் அறுவடை வரை... விவசாய கண்காட்சி இன்றுடன்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
01:53

மதுரை : மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லுாரி வளாகம் ஐ.டி.ஏ., டிரேடு சென்டரில் நடக்கும் விவசாயிகள் கண்காட்சியில் மணக்கும் மல்லிகை செடி முதல் நிலத்தை பண்படுத்தும் நவீன ஏர்கலப்பை வரை பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.



கால்நடைகளுக்கான மக்காச்சோளம், கம்பு உள்ளிட்டவற்றை சிறு, சிறு துண்டுகளாக்கும் இயந்திரம், வீட்டிலேயே எள், தேங்காய், கடலை எண்ணெய்யை தயாரிக்கும் 'ஆர்கானிக் ஆயில் மாஸ்டர்' கருவி அசத்தலாக உள்ளது.



உரம் தயாரிப்பதற்காக தென்னை, வாழை, பப்பாளி மட்டைகளை மணிக்கு 2200 கிலோ வரை துாளாக்கும் கருவியும், விவசாயிகள் பயன்பெற துாவல் நீர் பாசன கருவிகளும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இயற்கை விவசாயம், மாடி தோட்டம், அரசு மானியம், வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல், வங்கிக்கடன், பசுமை குடில், நீர் மேலாண்மை குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.



காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கும் இக்கண்காட்சி இன்றுடன் (ஆக.,25) நிறைவு பெறுகிறது. அனுமதி இலவசம்.


 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X