| கஞ்சா போதையில் ரவுடிகள் மயிலாப்பூரில் கத்திக்குத்து Dinamalar
கஞ்சா போதையில் ரவுடிகள் மயிலாப்பூரில் கத்திக்குத்து
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
02:20

கண்காணிப்பு கேமரா அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில், தந்தை, மகனை வெட்டிய, மூன்று வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர்.



சென்னை, மயிலாப்பூர், நாட்டான் தோட்டம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர், கேபிள் குமார், 52. இவரது மகன், மணிகண்டன், 27. இருவரும், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த, அருள், 26; தமிழரசன், 25 மற்றும் மனோஜ், 26 ஆகிய, மூன்று பேரும், கஞ்சா போதையில், குமாரின் வீட்டின் முன் தகராறில் ஈடுபட்டனர்.இதை, குமாரும், அவரது மகனும் தட்டிக் கேட்டனர். ஆத்திரமடைந்த மூவரும், தந்தை, மகனை தாக்கியதுடன், மறைத்து வைத்திருந்த கத்தியால், இருவரையும் குத்தி விட்டு தப்பினர்.இதில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த மனோஜை, பகுதி மக்கள் மடக்கி பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.படுகாயமடைந்த இருவரையும், உறவினர்கள், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.தப்பி ஓடிய, அருள் மற்றும் தமிழரசன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று, குமாரின் உறவினர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சென்ற போலீசார், இருவரையும் கைது செய்தனர்.இதையடுத்து, குமார் மற்றும் மணிகண்டன் ஆகியோர், மேல் சிகிச்சைக்காக, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


விசாரணையில், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே உள்ள காலி இடத்தில், அருள் தன் நண்பர்களுடன், தினமும் மது அருந்தியும், கஞ்சா புகைத்தும் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதை தட்டிக் கேட்ட, மணிகண்டனுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.மேலும், குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சுற்றி, அதன் அருகில் உள்ள காலி இடத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என, மணிகண்டன் மற்றும் சில இளைஞர்கள் செயல்பட்டனர். இதற்கு, அருள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதனால், ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, மணிகண்டனை வெட்டியுள்ளனர். அப்போது, தடுக்க வந்த குமாரையும் வெட்டியது தெரிய வந்தது. இதில், அருள், மயிலாப்பூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.


- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X