உடுமலை:உடுமலை உழவர்சந்தையில், காய்கறிகளின் விலை கிலோவுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து காணப்பட்டது.உடுமலை உழவர்சந்தையில், நேற்று கத்தரி கிலோ, ரூ.18 முதல், 24 ரூபாய் வரையும், வெண்டை, ரூ.26 முதல், 32 வரையும், தக்காளி, ரூ.6 முதல், 10 வரையும் விற்றது. அவரை, 25 ரூபாய் முதல், 35 வரையும், புடலங்காய், ரூ.18 முதல், 20 வரையிலும், பீர்க்கங்காய், ரூ.20 முதல், 24 வரையும், சுரைக்காய், ரூ.7 முதல், 14 வரையும், பாகற்காய், ரூ.25 முதல், 30, பச்சை மிளகாய், ரூ.24 முதல், 28 வரையும், சின்ன வெங்காயம், ரூ.30 முதல், 40 வரையும், பெரிய வெங்காயம், ரூ.34 முதல் 38 ரூபாய்க்கு விற்றது.முருங்கைக்காய், ரூ.24 முதல், 30 வரையும், உருளைக்கிழங்கு, ரூ.22 முதல், 35 வரையும், கேரட், ரூ.42 முதல் 45, பீட்ரூட், ரூ. 18 முதல், 24 வரையும், காலிபிளவர், ரூ.20 முதல், 30 வரையும், கொத்தமல்லி தழை கிலோ, ரூ.25, கருவேப்பிலை, ரூ.30 முதல், 40 வரையும் விற்றன. தேங்காய், ரூ.32 முதல், 35 வரையும், இஞ்சி, ரூ.80 முதல் 200 ரூபாய் வரையும், கீரை வகைகள் ஒரு கட்டு, ரூ.8 முதல் 10 வரையும், எலுமிச்சம்பழம், ரூ.100 முதல் 140 வரையும், புதினா, ரூ.45 ரூபாய்க்கும் விற்கப்பட்டன.