| சேதம் அடைந்த மின்கம்பங்கள் விவசாய பணிகளுக்கு இடையூறு Dinamalar
சேதம் அடைந்த மின்கம்பங்கள் விவசாய பணிகளுக்கு இடையூறு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
23:55

பொன்னேரி: 'வர்தா' புயலின்போது சேதம் அடைந்த இரும்பு மின்கம்பங்கள் அகற்றப்படாமல் இருப்பதால், அவை விவசாய பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.கடந்த, 2016ல், 'வர்தா' புயலின்போது, பொன்னேரி அடுத்த, ஆண்டார்குப்பம் கிராமத்தில் இருந்து, நெடுவரம்பாக்கம் செல்லும் சாலையில், விவசாய நிலங்களில் இருந்த மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன.மாற்று வழித்தடத்தில், மின்சாரம் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சேதம் அடைந்த மின்கம்பங்கள், இதுவரை அகற்றப்படாமல் கிடக்கின்றன. இவை, விளைநிலங்களில் விழுந்து கிடப்பதால், விவசாய பணிகளை மேற்கொள்ளும் போது விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.உழவு மற்றும் அறுவடை நேரங்களில் விழுந்து கிடக்கும் மின்கம்பங்களை சுற்றிலும், இயந்திரங்களை கொண்டு பணிகளை மேற்கொள்ள முடியாமல், விவசாயிகள் தவிக்கின்றனர்.மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், பயனற்ற இரும்பு மின்கம்பங்களை அகற்றுவதில், மின்வாரியம் மெத்தனம் காட்டுவதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். விவசாய பணிகளுக்கு இடையூறாக உள்ள மேற்கண்ட இரும்பு மின்கம்பங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X