| குடிநீர் பற்றாக்குறை; சுகாதாரக்கேடால் தவிப்பு Dinamalar
குடிநீர் பற்றாக்குறை; சுகாதாரக்கேடால் தவிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
23:55

பெரியகுளம் : வடுகபட்டி பேரூராட்சி 13வது வார்டு வள்ளுவர்தெருவில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.




இந்த வார்டில் 2,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். வள்ளுவர் தெருவில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை குடிநீர் தொட்டி பல மாதங்களாக பழுதடைந்துள்ளது. இதனால் மக்கள் நீண்டதுாரம் சென்று குடிநீர் கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அவசரகதியாக இந்தப்பகுதியில் அமைக்கப்பட்ட 'போர்வெல்'கள் பழுதடைந்து காட்சிப்பொருளாக கிடக்கிறது. வடிகால் உடைந்துள்ளதால் பல இடங்களில் சாக்கடை நீர் தெருவில் ஓடுகிறது. மழை காலங்களில் மழைநீரும், சாக்கடை நீரும் ஒன்றாக தேங்குகிறது.




மக்கள் கூறுவது என்ன:குடிநீர் பற்றாக்குறை எம்.இந்திரா: 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர்தொட்டி முழுவதும் சேதமடைந்துள்ளது. இதில் நீர் ஏற்றி வினியோகம் செய்ய முடியவில்லை. இதனை சீரமைக்க பல முறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. சாக்கடை உடைந்து கழிவுநீர் தேங்குகிறது. கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. சுகாதாரக்கேடு ஏற்பட்டு காய்ச்சலால் அடிக்கடி பலரும் பாதிக்கப்படுகின்றனர்.




குறைபாடுகளை களைந்து அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது அவசியம். சுகாதாரக் கேடு:ஏ.ஆனந்த்: குப்பை, சாக்கடை தேங்குவதை சீரமைக்க துப்புரவு பணியாளர்கள் வராததால் சுகாதாரக்கேடு நிலவுகிறது.'போர்வெல்' அமைத்து சில தினங்களிலே பழுதாகியுள்ளது. இது குறித்து பல முறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் பயனில்லை. . புதிய திட்டத்தின் வழியாக வைகை அணையிலிருந்து, இந்த பகுதி வழியாக தான் குடிநீர் செல்கிறது. புதிதாக மேல்நிலைத்தொட்டி கட்டி, குடிநீர் வடிகால் வாரியம் இந்த குடிநீரை எங்கள் வார்டுக்கும் வினியோகம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண் டும்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X