| புதர் சூழ்ந்த சுகாதார வளாகம்: பராமரிப்பில்லாததால் அதிருப்தி Dinamalar
புதர் சூழ்ந்த சுகாதார வளாகம்: பராமரிப்பில்லாததால் அதிருப்தி
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
23:59

கிணத்துக்கடவு:கொண்டம்பட்டி கிராமத்தில், குழந்தைகள் நல மையத்திற்கு எதிரே சுகாதார வளாகம் உள்ளது. இதில் தண்ணீர் வசதியுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சுகாதார வளாகத்தில் பராமரிப்பு பணிகள் எதுவும் மேற்கொள்வதில்லை. இதனால், வளாகத்தை சுற்றிலும் புதர் மண்டியுள்ளது.


இதனால், விஷ பாம்புகள் நடமாட்டம் இருப்பதால், இரவு நேரங்களில் சுகாதார வளாகத்தை பயன்படுத்த பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். சுகாதார வளாகாத்தின் கதவுகள் உடைந்துள்ளன. சுற்றுச்சுவரும் பழுதடைந்துள்ளது. இதனை சரி செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'சுகாதார வளாகத்தை சுற்றிலும் உள்ள புதர்களை அகற்றி, உடைந்த கதவுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X