ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் செட்டிக்குளம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2019
00:00

திருத்தணி: திருத்தணி நகராட்சியில் உள்ள செட்டிக்குளத்தை, சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியும், போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், முட்செடிகள் வளர்ந்துள்ளன.திருத்தணி நகராட்சியில் உள்ள காந்தி நகர் பகுதியில், நல்லதண்ணீர் குளத்தின் சாலையில், நாகலம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே, செட்டிக்குளம் உள்ளது. இக்குளத்தில், தண்ணீர் இருந்தால், காந்தி நகர், சுப்பராய மேஸ்திரி தெரு உட்பட அதை சுற்றியுள்ள வீடுகளில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும்.எதிர்பார்ப்புஇந்த குளத்தை நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்நிலையில், குளத்தை சுற்றியும் சிலர் நீர்வரத்து கால்வாய்களை புதைத்து வீடுகள் கட்டியுள்ளனர். மேலும், சிலர் குளத்தை ஆக்கிரமித்துள்ளனர். வீடுகள் கட்டுவதற்கும் முயற்சித்து வருகின்றனர்.குளத்தை முறையாக பராமரிக்காததால், தற்போது, குளத்தில் முட்செடிகள் வளர்ந்தும், கரை முழுவதும் செடிகள் வளர்ந்து, காடுபோல் காட்சியளிக்கிறது.எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, நகர பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.அகற்ற நடவடிக்கைஇது குறித்து, திருத்தணி வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நகராட்சியில் உள்ள செட்டிக்குளம் கிராமம், நத்தத்தில் வருகிறது. இந்த கணக்கில், குளம் எவ்வளவு பரப்பு என்பது உட்பிரிவு செய்தால் தான் குளத்தில் ஆக்கிரமிப்புகள் எவ்வளவு என, தெரிய வரும்.தற்போது, திருத்தணி நகரம் முழுவதும் சிறப்பு நில அளவையாளர்கள் மூலம் உட்பிரிவு செய்து, வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட உள்ளது.அதற்கான பணிகள் துரித வேகத்தில் நடந்து வருவதால், செட்டிக்குளத்தில் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X