| மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதால் வீணாகும் குடிநீர் Dinamalar
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதால் வீணாகும் குடிநீர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஆக
2019
00:01

பிஞ்சிவாக்கம்: பிஞ்சிவாக்கம் ஊராட்சியில், பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால், குடிநீர் வீணாகி வருகிறது.கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது பிஞ்சிவாக்கம் ஊராட்சி. இப்பகுதியில், அங்கன்வாடி அருகே, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, 10 ஆண்டுகளுக்கு முன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.இந்த குடிநீர் தொட்டி யின் மேற்பகுதியில் குழாய் வரும் வழியில், தொட்டி பழுதடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X