| மணல் கடத்தல் Dinamalar
மணல் கடத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஆக
2019
00:00

நடுவீரப்பட்டு : அரசு அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்த மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் சி.என்.பாளையம் கடைவீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரி நிறுத்த கூறினர். டிரைவர் வண்டியை நிறுத்தி விட்டு தப்பியோடினார்.போலீசார் வாகனத்தை சோதனை செய்ததில், அரசு அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. நடுவீரப்பட்டு போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.வேப்பூர்வேப்பூர் சப் - இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மேமாத்துார் அணைக்கட்டு அருகே மணல் திருட்டு நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போது, செங்கற்களை ஏற்றி கொண்டு டிராக்டர் டிப்பர் சென்றது.சந்தேகமடைந்த போலீசார் டிராக்டர் டிப்பரை மடக்கி சோதனையிட்டதில், டிப்பரின் மேல் பகுதியில் செங்கற்கலும் அடி பகுதியில் மணலும் இருப்பது தெரிய வந்தது.அதை அடுத்து டிராக்டர் டிரைவர் விருத்தாசலம் அடுத்த கச்சிபெருமாநத்தத்தை சேர்ந்த வேலு, 31; கைது செய்த போலீசார் டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X