| முதல்வர் இ.பி.எஸ்., திறந்து வைத்த , 'அம்மா' பூங்கா, 'அம்போ', ரூ.30 லட்சம் அரசு பணம் விரயம் Dinamalar
முதல்வர் இ.பி.எஸ்., திறந்து வைத்த , 'அம்மா' பூங்கா, 'அம்போ', ரூ.30 லட்சம் அரசு பணம் விரயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஆக
2019
00:02

திருவள்ளூர்: முதல்வர், இ.பி.எஸ்., காணொலி காட்சி மூலம், திறந்து வைத்த, 'அம்மா' பூங்கா, இதுவரை பயன்பாட்டிற்கு வராததால், 30 லட்சம் ரூபாய், அரசு பணம் விரயமானதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தமிழகம் முழுவதும், ஏழை, எளிய கிராமப்புற இளைஞர்கள், வசதியான இளைஞர்களை போல, உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்து, ஆரோக்கியம் பேண வேண்டும்.நிதி ஒதுக்கீடுவயதானோர், நடைப்பயிற்சி செய்து, உடல் ஆரோக்கியம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், 2016ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 'அம்மா' பூங்கா திட்டத்தினை அறிவித்தார்.திருவள்ளூர் மாவட்டத்தில், 524 ஊராட்சிகளில், 2016 -- 17ம் நிதியாண்டில், முதல் கட்டமாக, 50 பூங்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. நடைப்பயிற்சி பாதை, கழிப்பறை, குழந்தைகள் விளையாட உபகரணங்கள் ஆகியவற்றுக்கு, 20 லட்சம் ரூபாய்; நவீன உடற்பயிற்சி கூடம், ஜிம் வசதிகள், 10 லட்சம் ரூபாய் என, மொத்தம், 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.பயனில்லைதிருவள்ளூர் ஒன்றியம், ஈக்காடு ஊராட்சி, போக்குவரத்து நகரில், 'அம்மா பூங்கா' கட்டி, கடந்த, ஜன., 18ல், முதல்வர் இ.பி.எஸ்., காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இங்கு, சிறுவர் விளையாட்டு உபகரணம், நடைபாதை, கழிப்பறை என, அனைத்து வசதிகளும் உள்ளன.ஆனால், இன்று வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதன் காரணமாக, அரசு பணம் விரயமானதாகவும், இனியும் காலதாமதம் செய்யாமல், மாவட்ட நிர்வாகம், உடனடி நடவடிக்கை எடுத்து, பூங்காவை செயல்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.நுழைவு வாயிலில் புதர்ஈக்காடு, 'அம்மா' பூங்கா திறக்கப்பட்டும், பயன்பாட்டிற்கு வராததால், சீர்கெட்டு காணப்படுகிறது. நுழைவு வாயிலில், ஐந்தடி உயரத்தில் புற்று உள்ளது. உள்ளே, விளையாட்டு சாதனங்கள் சேதமடைந்தும், நடைபயிற்சி பாதை, புதராகவும் உள்ளது.இரவு நேரத்தில், 'குடி'மகன்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதனால், அருகில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X