தண்ணீர் ததும்பும் சோலையாறு அணை: ஆழியாறு, பரம்பிக்குளம் நிரம்பாததால் சோகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2019
00:03

வால்பாறை:சோலையாறு அணை தொடர்ந்து, 16வது நாளாக நிரம்பிய நிலையில் காட்சியளிப்பதாலும், மழையின் தீவிரம் குறைந்ததாலும், சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.வால்பாறையில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தாமதமாக துவங்கியது. தீவிரமடைந்த மழையால், கடந்த, 11ம் தேதி, 160 அடி உயரமுள்ள சோலையாறுஅணை நிரம்பியது.


இதனையடுத்து, பரம்பிக்குளம் அணைக்கு சேடல்டேம் வழியாக தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.காடம்பாறை அணை நிரம்பியதையடுத்து மேல்ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, ஆழியாறு அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.சோலையாறு அணை, 16வது நாளாக நிரம்பிய நிலையில் காட்சியளிக்கிறது. மழை பொழிவும் குறைந்துள்ளதால், வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள், சோலையாறு அணையின் இயற்கை அழகை கண்டு ரசிக்கின்றனர்.


நேற்று காலை நிலவரப்படி, மேல்நீராறு அணையிலிருந்து வினாடிக்கு, 1,039 கனஅடி தண்ணீரும், கீழ்நீராறு அணையிலிருந்து, 158 கனஅடி தண்ணீரும், சோலையாறு அணைக்கு திறந்துவிடப்படுகிறது.இதனால், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 160.90 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,835 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 1,950 கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், நேற்று காலை, 51.95 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,432 கனஅடி நீர் வரத்து இருந்தது. ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், 94.70 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 307 கனஅடி நீர்வரத்தும், 103 கனஅடி நீர்வெளியேற்றமும் இருந்தது.


அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவது மகிழ்ச்சியளித்தாலும், இந்தாண்டு பரம்பிக்குளம், ஆழியாறு அணைகள் இன்னும் நிரம்பவில்லை.கடந்த ஆண்டை போல, அனைத்து அணைகளும் நிரம்பியிருந்தால் பாசனத்துக்கு தண்ணீர் வழங்குவதில் சிக்கல் இருக்காது. அதனால், வடகிழக்கு பருவமழை காலத்தில், கனமழை பெய்து அணைகள் நிரம்பினால், பாசனம் தாக்குப்பிடிக்கும் என்கின்றனர் விவசாயிகள்.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்):வால்பாறை - 17, சோலையாறு - 17, பரம்பிக்குளம் - 7, மேல்நீராறு - 23, கீழ்நீராறு - 23, காடம்பாறை - 3, துணக்கடவு - 14, பெருவாரிப்பள்ளம் - 26, மணக்கடவு - 5, என்ற அளவில் மழை பெய்தது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X