| மத்திய அரசு விவசாயிகள் ஓய்வூதிய திட்டம்: விண்ணப்பிக்க வேளாண்துறை அழைப்பு Dinamalar
மத்திய அரசு விவசாயிகள் ஓய்வூதிய திட்டம்: விண்ணப்பிக்க வேளாண்துறை அழைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஆக
2019
00:04

மடத்துக்குளம்:பாரதப்பிரதமரின் விவசாயிகள் ஓய்வூதியத்திட்டத்தில் பயன்பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேளாண்மைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


மடத்துக்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி கூறியதாவது:பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம், நுண்ணீர் பாசனத்திட்டம், விவசாய கவுரவ ஊக்கத்தொகை திட்டங்களின் வரிசையில், ஓய்வூதியத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது.இத்திட்டத்தில், 18 முதல் 40 வயது வரையுள்ள விவசாயிகள் பங்கேற்கலாம். இதில் இணையும் விவசாயிகள், தங்கள் சந்தாவாக மாதம், 55 முதல், 200 ரூபாய் வரை செலுத்தலாம்.


இந்த தொகைக்கு இணையான தொகையை மத்திய அரசு, விவசாயி கணக்கில் சேர்க்கும். திட்டத்தில், 60 வயதுக்கு பின்பு, மாதம், 3,000 ரூபாய் ஓய்வூதியமாக விவசாயிக்கு வழங்கப்படும்.திட்டகாலத்துக்கு முன், சம்பந்தப்பட்ட விவசாயி இறந்தால், மனைவி இல்லாவிட்டால், இந்தத்தொகை வட்டியுடன் அவரின் வாரிசுக்கு வழங்கப்படும். மனைவி இருந்தால் திட்டப்பலனில், 50 சதவீதம் அல்லது 1,500 ரூபாய் மனைவி இறுதிக்காலம் வரை வழங்கப்படும்.


கிஷான் திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள், அத்திட்ட வங்கிக்கணக்கு மூலம் மாதத்தொகையை செலுத்தலாம். ஓய்வூதியம் வழங்கும் பொறுப்பை எல்.ஐ.சி., ஏற்றுள்ளது.கூடுதல் தகவலுக்கும், ஓய்வு ஊதியத்துக்கு விண்ணப்பிக்கவும், மடத்துக்குளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தை விவசாயிகள் அணுகலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X