உடுமலை:கல்வி தொலைக்காட்சி துவக்க விழாவில் மாணவர்கள் பங்கேற்பை எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்யவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மாணவர்களுக்கு கல்வி சார்ந்த செய்திகள், தகவல்கள் மற்றும் நிகழ்வுகளை ஒளிப்பரப்ப தமிழக அரசின் சார்பில் கல்வி தொலைக்காட்சி சேனல் இன்று முதல் துவக்கப்படுகிறது.இதன் துவக்க விழாவை, அனைத்து பள்ளி மாணவர்களும் காண்பதற்கு, ஏற்பாடு செய்திருக்க வேண்டுமென ஏற்கனவே, கல்வித்துறை அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்நிகழ்ச்சி பள்ளிகளில் ஒளிப்பரப்ப பட்டதையும், மாணவர்கள் அதனை காண்பதும், போட்டோக்கள் எடுத்து, எமிஸ் இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டுமெனவும், கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.