மப்பேடு: மப்பேடு அருகே, இளம்பெண்ணை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.மப்பேடு அடுத்த, மேட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சத்தியநாதன் மகள் ரஜினி, 21. இவர், அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில், இதே தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும், மேட்டுச்சேரியைச் சேர்ந்த ஜனார்த்தனன் மகன் ஜெயக்குமார் (எ) ராபின், 26, என்பவர், இரு மாதமாக, மொபைல்போனில் பேசச் சொல்லி வற்புறுத்தி வந்துள்ளார்.இதற்கு, ரஜினி பேச மறுக்கவே, நேற்று முன்தினம், ரஜினியை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துஉள்ளார்.இது குறித்து, மப்பேடு போலீசில், ரஜினி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.