காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த காவலர் தேர்வில், 3,083 பேர் பங்கேற்கவில்லை.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில், இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர் என, 8 ஆயிரத்து, 826 காலி பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நேற்று, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 12 மையங்களில் நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நடந்த காவலர் தேர்வை, வடக்கு மண்டல காவல்துறை தலைவர் பி. நாகராஜன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் ஆகியோர் பார்வையிட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரையில், நான்கு மையங்களில், நேற்று நடந்த காவல் தேர்விற்கு, 7,145 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில், 5,943 பேர் தேர்வு எழுதினர், 1,202 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரையில், எட்டு மையங்களில், நேற்று தேர்வு நடைபெற்றது. மொத்தம், 11 ஆயிரத்து, 396 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 1,881 பேர் 'ஆப்சன்ட்' ஆகினர். மீதமுள்ள, 9,510 பேர் நேற்று தேர்வெழுதிஉள்ளனர்.
- நமது நிருபர் -