நகரி: மூன்று கொலை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருந்த தமிழக வாலிபரை, ஆந்திரா போலீசார் கைது செய்தனர்.சித்துார் மாவட்டம், நகரி அடுத்த, முனியப்பநாயுடு கண்டிகையைச் சேர்ந்தவர் கோபால் மனைவி சரோஜம்மாள்,65. விசாரணைஇவர், கடந்த, ஜூன் 24ல், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். நகரி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், நகரி அடுத்த, தடுக்குப்பேட்டை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பிடிபட்டவர், வேலுார் மாவட்டம், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன், 35 என, தெரிந்தது.பின், போலீசாரிடம் ஆனந்தன் வாக்குமூலத்தில் கூறியதாவது:கடந்த ஜூன் 24ல், சரோஜம்மாளை கொலை செய்தேன். இதற்காக, சரோஜம்மா கணவர் கோபால், அவரது மகன் நரசிம்மன் ஆகியோரிடம், 30 ஆயிரம் ரூபாய் பேரம் பேசி, 5,000 ரூபாய் முன்தொகை வாங்கினேன்.அடகுஅதே போல், ஜூலை மாதம், அரக்கோணம் அடுத்த, சின்னக்கைனுாரைச் சேர்ந்த நிர்மலா, 30 என்ற பெண்ணையும் கொலை செய்தேன். இதற்காக, அரக்கோணத்தைச் சேர்ந்த இந்திரராணி என்ற பெண்ணிடம், பணம் வாங்கினேன்.மேலும், அரக்கோணத்தில் சங்கர் என்பவரின் கடையில் வேலை செய்த போது, அவரது மகனை கடத்தி கொலை செய்து புதைத்தேன். பிச்சாட்டூர், கோவர்த்தனகிரி சேர்ந்த சுபத்திரம்மாவை கொலை செய்ய முயற்சித்தேன். இதுதவிர, மூன்று முறை நகை, பணம் திருடினேன். அந்த நகைகளை, காஞ்சிபுரம் அடுத்த, சேந்தமங்கலம் சேர்ந்த மன்னன், என்பவரிடம் அடகு வைத்துள்ளேன்.இவ்வாறு ஆனந்தன் போலீசாரிடம் வாக்குமூலம் கூறினார்.நகரி போலீசார் ஆனந்தனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த கோபால், நரசிம்மன், மன்னன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.