| வெள்ளாடுகள் பெறும் பயனாளிகள் தேர்வு கூடுதல் இயக்குனர் நேரில் ஆய்வு Dinamalar
வெள்ளாடுகள் பெறும் பயனாளிகள் தேர்வு கூடுதல் இயக்குனர் நேரில் ஆய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஆக
2019
00:15

திருத்தணி: அரசின் சார்பில் வழங்கவுள்ள விலையில்லா ஆடுகள் பெறும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்ட பட்டியலை, தமிழக கால்நடை துறையின் கூடுதல் இயக்குனர் நேற்று நேரில் வந்து ஆய்வு செய்தார்.திருத்தணி கோட்டம், திருவாலங்காடு ஒன்றியம், லட்சுமாபுரம் ஊராட்சியில் நடப்பாண்டில், 114 பயனாளிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்படுகின்றன.ஒவ்வொரு பயனாளிகளுக்கும், நான்கு ஆடுகள் வழங்கப்பட உள்ளன. தகுதி வாய்ந்த பயனாளிகளை, கடந்த, 16ம் தேதி நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு மனுக்கள் பெறப்பட்டன.இவர்களுக்கு, வரும் டிசம்பர் மாதம் விலையில்லா ஆடுகள் வழங்கப்பட உள்ளன. இந்நிலையில், நேற்று, தமிழக கால்நடை துறை கூடுதல் இயக்குனர் பண்ணை மனோகரன், தலைமை அலுவலக மண்டல இயக்குனர் பாலகிருஷணன் மற்றும் திருத்தணி கோட்ட கால்நடை உதவி இயக்குனர் தாமோதரன் ஆகியோர் நேரில் சென்று தேர்வு செய்யப்பட்ட மனுக்களை ஆய்வு செய்தனர்.இதில், தகுதி வாய்ந்தவர்களிடம் கூடுதல் இயக்குனர் விசாரணை நடத்தி, பயனாளிகளை பட்டியலை சரி பார்த்தார். நிகழ்வின் போது, கால்நடை துறை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X