| சர்வீஸ் ரோடு பணி தீவிரம்: மேற்கில் மட்டும் நிலுவை Dinamalar
சர்வீஸ் ரோடு பணி தீவிரம்: மேற்கில் மட்டும் நிலுவை
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஆக
2019
00:15

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவில், பஸ் ஸ்டாண்ட் முன்பாக, சர்வீஸ் ரோடு புதுப்பிக்கும் பணி நடக்கிறது.கிணத்துக்கடவில், மேம்பாலத்தின் கீழே உள்ள சர்வீஸ் ரோட்டில் மழை நீர் சேகரிப்பு வடிகால் கட்டி முடிக்கப்பட்டு, முதல் கட்ட தார்ரோடு போடப்பட்டது. சென்டர் மீடியனில், அழகு செடிகள் வைக்கப்பட்டது.மேம்பாலத்தின் மேல் இருந்து வரும் மழை நீர், குழாய்கள் மூலம், சென்டர்மீனியன் பூங்காவுக்கு கொண்டு வரப்படுகிறது.


இதனை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக தார் ரோடு பணி துவங்கியுள்ளது. ரோட்டின் ஓரங்களிலும், ரோட்டின் மையத்திலும் மஞ்சள் நிற குறியீடு போடப்பட்டது. ரோட்டின் இரண்டு பக்கங்களிலும், சிக்னல் போர்டுகள் வைக்கப்பட்டது.சர்வீஸ் ரோட்டில், பஸ்ஸ்டாண்ட் பகுதியில் வாகனங்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் இடத்திலும், பொன்மலை வேலாயுதசாமி கோவில் அடிவாரத்தை சுற்றி வரும் ரோட்டிலும், செக்போஸ்ட் பகுதியிலும் தார் ரோடு பணி நடந்தது. மேம்பாலத்தின் அணுகுபாலத்தை ஒட்டிய மேற்கு பகுதியில் மட்டும், சர்வீஸ் ரோடு பணி நிலுவையுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X