மப்பேடு: மப்பேடு அருகே, மாரியம்மன் கோவிலில் திருட முயற்சி நடந்துள்ளது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.மப்பேடு அடுத்துள்ளது நரசிங்கபுரம். இங்குள்ள கிராம எல்லையில் உள்ள மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை நேற்று காலை பூசாரி ரவி திறக்க வந்த போது முன்புற கேட்டில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.மேலும், கோவில் அருகே ரத்தக்கறையும் இருந்தது. தகவலறிந்த மப்பேடு போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து, மப்பேடு போலீசார் கூறுகையில், மாரியம்மன் கோவிலில் பூட்டு உடைக்கப்பட்டு திருட முயற்சி நடந்துள்ளது. ஆட்கள் நடமாட்டம் தெரிந்ததும், திருட வந்தவர்கள் தப்பியோடியிருக்கலாம்.ஆனால், கோவிலில் எவ்வித பொருளும் திருடு போகவில்லை. மேலும், கோவில் அருகில் அனாதையாக, 'நம்பர் பிளேட்' இல்லாத ஹோண்டா சைன் இருசக்கர வாகனத்தை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.