| 3 ஏரி, 8 தடுப்பணைகள் சீரமைக்க பொதுப்பணித்துறை முடிவு Dinamalar
3 ஏரி, 8 தடுப்பணைகள் சீரமைக்க பொதுப்பணித்துறை முடிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஆக
2019
00:16

திருத்தணி: உலக வங்கி நிதியுடன், 80 லட்சம் மதிப்பீட்டில், 3 ஏரிகள், 8 நீர்வரத்து கால்வாய் தடுப்பணைகள் சீரமைக்க பொதுப்பணித் துறையினர் தீர்மானித்து உள்ளனர்.திருத்தணி ஒன்றியம், தாடூர், தெக்களூர் சித்தேரி மற்றும் அலுமேலுமங்காபுரம் ஆகிய மூன்று ஏரிகளின் மதகுகள், கரை மற்றும் நீர்போக்கி கலங்கல் ஆகியவற்றை சீரமைக்க பொதுப்பணித் துறையினர் தீர்மானித்துள்ளனர்.இதற்காக, உலக வங்கி நிதியுதவிடன் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்குவதற்கு ஒரு ஏரிக்கு, தலா, 15.17 லட்சம் ரூபாய் மதிப்பீடு தயார் செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இதுதவிர, நந்தியாற்றில் இருந்து, ஏரி மற்றும் வயல்வெளிக்கு செல்லும் வகையில் நீர்வரத்து கால்வாய் மற்றும் தடுப்பணை என, மொத்தம், 8 கட்டுவதற்கும் திட்ட மதிப்பீடு தயார் செய்து அறிக்கை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளது.இது குறித்து திருத்தணி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர், வினோத்பாண்டி கூறியதாவது:நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் வகையில், நடப்பாண்டில், 3 ஏரிகள் மற்றும், 8 தடுப்பணைகள் சீரமைக்கப்பட உள்ளன. இதற்காக திட்ட மதிப்பீடு மொத்தம், 80 லட்சம் ரூபாய் தயாரித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ளோம். நிர்வாக அனுமதி கிடைத்தவுடன், ஒரு மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X