செயல்படாத சுகாதார வளாகங்கள்; திறந்தவெளியை நாடும் மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2019
00:18

விருதுநகர் : விருதுநகரில் செயல்படாத சுகாதார வளாகங்களால் திறந்தவெளியை மக்கள் கழிப்பறையாக பயன்படுத்தும் அவலநிலை தொடர்கிறது.



இந்நிலையை மாற்ற வேண்டிய மாவட்ட நிர்வாகமே மவுனமாக உள்ளது என விருதுநகர் மக்கள் கூறுகின்றனர். விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. ஒன்றியத்தில் 40க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள பெரும்பான்மை சுகாதார வளாகங்கள் செயல்படாமலே உள்ளது. வெறும் காட்சி பொருளாய் வைப்பதற்கு ஏன் இத்தனை லட்சம் செலவளிக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கேள்வி கேட்க துவங்கி உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரும் திட்டத்தை தோல்வியடைய செய்வதே அரசு அதிகாரிகளின் பணி ஆகும். மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறை இன்னும் பல வீடுகளுக்கு கட்டித்தரப்படவில்லை.




பொது சுகாதார வளாகத்தையாவது பொதுமக்களுக்கு பயன்படும் விதத்தில் வைக்கலாம், முறையாக பராமரிக்கலாம். ஆனால் இதையும் உள்ளாட்சி அதிகாரிகள் செய்ய மறுக்கின்றனர். நகராட்சிப்பகுதிகளில் உள்ள பொது சுகாதார வளாகத்திற்கு ஊழியர்களை நியமனம் செய்து சுத்தம் செய்யலாம். ஊராட்சி பகுதிகளில் சுத்தம் செய்ய தனிநபர் அமைத்து அவருக்கு ஊதியம் வழங்கலாம். ஆனால் இதை எதையுமே உள்ளாட்சி அமைப்புகள் செய்வதில்லை. இதனால் பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தை நாடுகின்றனர்.




பெண்கள், முதியவர்கள் இரவு நேரங்களில் காட்டுப்பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது.நீண்ட துாரம் நடக்குறோம் சுகாதார வளாகங்கள் செயல்படாததால் முட்புதர் பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. மாவட்ட நிர்வாகம் செயல்படாத சுகாதார வளாகங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். திறந்தவெளிக் கழிப்பிடத்தால் நோய்த்தொற்று தான் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.-முருகன், கூலித்தொழிலாளி, விருதுநகர். ரொம்ப சிரமப்படுகிறோம்சுகாதார வளாகங்கள் செயல்படாததால் மிகவும் சிரமப்படுகிறோம். உள்ளாட்சி பிரதிநிதிகள் யாரும் இல்லாததால் யாரிடம் சென்று முறையிடுவது என தெரிய வில்லை. லட்சக் கணக்கில் செலவு செய்து கட்டப்பட்ட சுகாதார வளாகங்கள் செயல்படாமல் இருப்பதால் அரசுநிதி வீணாகிறது.




அன்னலெட்சுமி, குடும்பத்தலைவி, விருதுநகர்.திறந்தவெளி வேண்டாமே நகர், கிராமப் புறங்களில் திறந்தவெளி கழிப்பிடங்கள் வேண்டாம். இது பொது சுகாதாரத்திற்கு அபாய சங்காக ஒலிக்கும். சுகாதார வளாகங்களை நாங்களே பராமரிக்க தயார். ஆனால் அதை செயல்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் தயாரா என்பது தான் தெரியவில்லை.-அன்னபூர்ணம், குடும்பத்தலைவி, விருதுநகர்.குடிமகன்களின் பாராகுது செயல்படாத சுகாதார வளாகங்கள் குடிமகன்களின் பாராக மாறி வருகிறது.




கழிப்பிட வசதி வேண்டி அதிகாரிகளிடம் பலமுறை அளிக்கப்பட்டுள்ளது. எவ்வித நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை. நான்கு வழிச்சாலையை திறந்தவெளிக்கழிப்பிடமாக பயன்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. வாசுகி, குடும்பத்தலைவி, விருதுநகர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X