| வயல்களில் உழவுப் பணி தீவிரம் Dinamalar
வயல்களில் உழவுப் பணி தீவிரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஆக
2019
00:18

கம்பம் : கம்பம் பகுதியில் நெல் வயல்களில் உழவு பணிகள் தீவிரமடைந்துள்ளது.



முடிந்த அளவு நடவு செய்ய விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். கம்பம் பள்ளத்தாக்கில் நெல் சாகுபடி சமீப காலங்களில் செய்ய முடியாத நிலை உருவாகி வருகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் சரியத் துவங்கியுள்ளது. அணைக்கு நீர்வரத்து குறைவாகவும், விடுவிக்கும் அளவு அதிகமாகவும் உள்ளது. அரசு முறைப்படி நீர் திறப்பை அறிவிக்கவில்லை. இருந்த போதும் விவசாயிகளின் நலன் கருதி, அதிகாரிகள் நாற்றுகள் வளர்க்க வாய்க்கால்கள் மூலம் சிறிது தண்ணீர் திறந்துவிட்டுள்ளனர்.




அந்த தண்ணீரை பயன்படுத்தி நாற்றுகள் வளர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நெல் தரிசில், தண்ணீரை தேக்கி, டிராக்டரை கொண்டுஉழவு செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இதுமுடிந்தவுடன் நடவு செய்ய ஆயத்தமாகி வருகின்றனர். அதற்குள் அணையிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறையும் அறிவித்துள்ளது. இது தவிர சில பகுதிகளில் மோட்டார் பம்ப் செட் தண்ணீரை பயன்படுத்தி நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X