புகார் பெட்டி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2019
00:19

புழக்கத்திற்கு சிரமம் ராஜபாளையம் செட்டியார்பட்டி பேரூராட்சியில் உப்புத்தண்ணீர் வசதி இல்லை. இதனால் புழக்கத்திற்கு மிகவும் சிரமப்படுகிறோம். உப்புத்தண்ணிரை வழங்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பெரியதாஸ், செட்டியார்பட்டிமட்டமான ரோடுஅருப்புக்கோட்டை பந்தல்குடியில் ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.




இது தொடர்பாக ஊராட்சியில் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. எவ்வித நடவடிக்கையும் இல்லை.மனோகரன், பந்தல்குடி.ரோட்டில் மண்விருதுநகர் பாவாலி ரோட்டில் மண் மேவி குவிந்துள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் சறுக்கி விழுகின்றன. அருகில் பள்ளியும் உள்ளது. காலை, மாலை நேரத்தில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடத்தில் இது போன்று மண் குவிந்து கிடப்பது வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது.-சந்திரன், விருதுநகர். தேவையற்ற வேகத்தடைகள் விருதுநகர் சாத்துார் ரோட்டில் தேவையற்ற வேகத்தடைகளால் விபத்து அதிகரித்து வருகிறது.




விருதுநகரில் இருந்து சாத்துார் செல்லும் ரோடு இரவு நேரங்களில் கும்மிருட்டு பகுதியாக இருக்கும். இந்த மாதிரி நேரங்களில் செல்வோர் வேகத்தடை இருக்குமிடம் தெரியாததால் வேகமாக சென்று விபத்தில் சிக்குகின்றனர். நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முத்துவடிவேல், விருதுநகர். தேங்கும் கழிவுநீரால் அவதி சிவகாசி ஒன்றியம் ஆலமரத்துபட்டி ஊராட்சி வினோபா காலனியில் வாறுகாலில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு அதிகரித்துள்ளது.




தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வி.ரத்னகுமார், ஆலமரத்துபட்டி. அள்ளப்படாத வாறுகால் ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா வத்திராயிருப்பு ஒன்றியம் ராமசாமியாபுரம் ஊராட்சி ஆயில்மில் சர்ச் தெருவில் ஓராண்டாகியும் இதுவரை வாறுகால் அள்ளப்படவில்லை. இது தொடர்பாக ஊராட்சியில் புகாரளித்தும் நடவடிக்கையும் இல்லை. பொதுமக்கள் நலன் கருதி வாறுகாலை துர்வார உரிய நடவடிக்கை எடுக்க ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.-சதீஷ், ராமசாமியாபுரம் கிணற்றை துார்வாரலாமே ராஜபாளையம் நகராட்சி 4வது வார்டு ஆவாரம்பட்டியின் பெருமாள் கோயில் சன்னதி தெரு பகுதியில் கிணறு ஒன்று நீண்ட நாட்களாக புதர்மண்டி கிடக்கிறது. இதை துார்வாரினால் பொதுமக்களின் குடிநீர் பஞ்சம் தீரும்.




இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.-குருமூர்த்தி, ராஜபாளையம். சுடுகாடு இல்லை விருதுநகர் ஒன்றியம் ரோசல்பட்டி ஊராட்சியில் சுடுகாடு முறையாக செயல்படுவதில்லை. இதனால் அங்கு இறந்த பிணங்களை விருதுநகர் நகராட்சிக்கு சொந்தமான புல்லலக்கோட்டை சுடுகாட்டுக்கு எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ரோசல்பட்டியில் இருந்து புல்லலக்கோட்டை ரோடு அதிக துாரம் என்பதால் ரோசல்பட்டி சுடுகாட்டை விரைவில் செயல்படுத்த ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஆண்டவர், விருதுநகர். மலைபோல் குவியும் குப்பைகாரியாபட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே குப்பை மலை போல் குவிந்து கிடக்கிறது.




இதனால் அப்பகுதியில் பெரும் சுகாதாரகேடு ஏற்படுகிறது. பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். குப்பையை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முத்துராஜ், காரியாபட்டி.செயல்படாத சுகாதார வளாகம் விருதுநகர் ஒன்றியம் எண்டப்புலி ஊராட்சி குப்பாம்பட்டியில் பொதுசுகாதார வளாகம் செயல்படவில்லை. இதனால் பொதுமக்கள் சுகாதார வளாகத்திற்காக பக்கத்து கிராமங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முத்துமாணிக்கம், குப்பாம்பட்டி.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X