| கல்வி பாதிக்கும் நிலை Dinamalar
கல்வி பாதிக்கும் நிலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஆக
2019
00:21

தேனி : அல்லிநகரத்தில் அரசு மாணவர் விடுதி இல்லாததால் கல்வியை கைவிடும் நரிக்குறவர்கள், மலைவாழ் மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.



அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆயிரத்து 200 மாணவர்கள் படிக்கின்றனர். தேனியில் அரசு, உதவி பெறும் பள்ளிகள் பல இருந்தாலும், அரசு மேல்நிலைப்பள்ளி இங்குதான் உள்ளது. இப் பள்ளிக்கு அகமலை, ஊரடி, ஊத்துக்காடு, சொக்கன்அலை பகுதியில் உள்ள பழங்குடியின மாணவ, மாணவியர்கள் ஆரம்ப கல்வி முடித்து இடைநிலை கல்விக்கு அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வருகின்றனர். இப் பகுதியில் இருந்து 45 பேர் அல்லிநகரம் பள்ளியில் படிக்கின்றனர். தேனி தென்றல் நகரில் நரிக்குறவர்கள் பகுதியில் ஆரம்ப கல்வி முடித்து இடைநிலை கல்விக்கு அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வருகின்றனர். இப் பகுதியில் இருந்து 35 பேர் படிக்கின்றனர்.



வியாபாரத்திற்கு செல்லும் மாணவர்கள்:மேல்நிலைப்பள்ளி அருகே அரசு பெண்கள் விடுதி உள்ளது. மாணவியர்களுக்கு தங்கி பயில்கின்றனர். மாணவர்கள் தங்கி பயில அல்லிநகரத்தில் அரசு விடுதி இல்லை. எனவே, தேனி, அன்னஞ்சி அரசு விடுதிகளில் சிலர் சேர்ந்துள்ளனர். இங்கிருந்து பள்ளிக்கு சென்று வர மினி பஸ் இருந்தாலும் பஸ் கட்டணம் தர வசதி இல்லை. எனவே, படிப்பைபாதியில் விட்டு செல்கின்றனர்.



நரிக்குறவர் குழந்தைகள் வீட்டில் இருந்து படிக்கும் போது ஐயப்பன் கோயில் சீசன், வீரபாண்டி கவுமாரியம்மன் திருவிழா, குச்சனுார் சனீஸ்வர பகவான் ஆடி திருவிழா என திருவிழா நடந்தால் பெற்றோருடன் சேர்ந்து ஊசி, பாசி விற்க சென்று விடுகின்றனர். வியாபாரத்திற்காக ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை பெற்றோருடன் தங்கி விடுகின்றனர். திரும்ப பள்ளி வர மறுக்கின்றனர்.கல்வி பாதிக்கப்படுகிறது.




இவர்களிடம் கூடுதல் கற்றல் திறன் இருந்தாலும் தொடர் கல்வி கற்க முடியாததால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அல்லிநகரத்தில் அரசு மாணவர் விடுதி ஏற்படுத்திட பெற்றோர்கள் கோருகின்றனர்.---------

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X