| புடலங்காய்க்கு உரிய விலை விவசாயிகள் மகிழ்ச்சி Dinamalar
புடலங்காய்க்கு உரிய விலை விவசாயிகள் மகிழ்ச்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஆக
2019
00:23

கம்பம் : கம்பம் பகுதியில் புடலங்காய்க்கு நல்ல விலை கிடைத்து வருவதால், விவசாயிகள் ஆர்வத்துடன் அறுவடை செய்து வருகின்றனர்.



தேனி மாவட்டத்தில் திராட்சை, வாழை, மா, கொய்யா போன்ற பழப்பயிர்களும், கத்தரி, வெண்டை, பீட்ரூட், தக்காளி, மிளகாய் போன்ற காய்கறி பயிர்களும் அதிக பரப்பில் சாகுபடியாகிறது. கம்பம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, அணைப்பட்டி, ராயப்பன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, குள்ளப்பகவண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் காய்கறி பயிர்கள் அதிக பரப்பில் சாகுபடியாகிறது. குறிப்பாக குறுகிய கால பயிர்கள் 2 மாதங்களில் அறுவடை செய்யப்படும் புடலை, வெங்காயம், தக்காளி, நுால்கோல் உள்ளிட்ட பயிர்கள் தற்போது விரும்பி சாகுபடியாகிறது.



பந்தல் காய்கறிகளில் தற்போது புடலங்காய் அதிகபரப்பில் விவசாயிகளால் விரும்பி சாகுபடி செய்கின்றனர். குறுகிய காலம், செலவு குறைவு, நல்ல வருவாய் கிடைக்கும். புடலங்காய்களில் கேரளாவில் அதிகம் விரும்பி வாங்கும் பன்னி புடலங்காய் தற்போது அதிக பரப்பில் சாகுபடியாகிறது. விலை கிலோ ரூ. 20 க்கு மேல் கிடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் ஆர்வமுடன் அணைப்பட்டி பகுதியில் அறுவடை செய்து வருகின்றனர்.




விவசாயிகள் கூறுகையில், பன்னி வகை புடலை கேரளாவில் விரும்பி வாங்குகின்றனர். செஞ்சூரியன் ரகம் தமிழ்நாட்டில் கிராக்கியாகும். தற்போது கேரளாவில் பன்னி ரகத்திற்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. பெரும்பாலும் இந்த ரகம் கேரளாவிற்கு தான் அனுப்புகின்றோம் என்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X